இலங்கை ரூபாவின் பெறுமதியில் தொடர் வீழ்ச்சி : மத்திய வங்கியின் தகவல்
நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்றையதினம்(03.11.2023) அமெரிக்க டொலரின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.
இதன்படி, இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றது.
இன்றைய நாணய மாற்று விகிதம்
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (03.11.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 334.13 ரூபாவாகவும், கொள்வனவு விலை 323.65 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 244.70 ரூபாவாகவும், கொள்வனவு விலை 233.92 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 357.11 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 342.29 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 409.35 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 393.64 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
தமிழர்களை வெட்டுவேன் என்ற அம்பிட்டிய தேரருக்கு பகிரங்க சவால்! முடிந்தால் நாடாளுமன்ற மைதானத்திற்கு வரவும்
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 19 நிமிடங்கள் முன்
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri