வலுவிழக்கும் இலங்கை ரூபாவின் பெறுமதி
நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது இன்றையதினம்(24.10.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் இது தொடர் வீழ்ச்சியாகும்.
இன்றைய நாணய மாற்று விகிதம்
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (24.10.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 331.39 ரூபாவாகவும், கொள்வனவு விலை 320.81 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 243.97 ரூபாவாகவும், கொள்வனவு விலை 233.10 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 356.05 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 341.06 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 408.16 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 392.20 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
பிரித்தானியாவில் 181 மில்லியன் பவுண்டுகள் அலைபேசி கொள்ளைச் சம்பவம்: சிக்கிய புகலிடக் கோரிக்கையாளர் News Lankasri