தொடர் வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கை ரூபாவின் பெறுமதி
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது இன்றையதினம்(23.10.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் இது தொடர் வீழ்ச்சியாகும்.
இன்றைய நாணய மாற்று விகிதம்
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (23.10.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 331.00 ரூபாவாகவும், கொள்வனவு விலை 320.32 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 242.99 ரூபாவாகவும், கொள்வனவு விலை 231.92 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 352.26 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 337.26 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 404.13 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 388.08 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இலங்கையில் நடிகர் விஜயின் லியோ திரைப்படம் பார்க்க சென்றவர்களுக்கு நேர்ந்த கதி: குவிக்கப்பட்ட பொலிஸார்

பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
