இலங்கையில் 400 ரூபாவை விட அதிகரிக்கும் டொலரின் பெறுமதி..! கடுமையான நெருக்கடி குறித்து எச்சரிக்கை
நாட்டில் பொருளாதார நிலைமையானது இப்படியே தொடருமானால் டொலரின் மதிப்பு 400 ரூபாவை விட அதிகரிக்கும் என பேராதனை பல்கலைக்கழக பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் துறை பேராசிரியர் வசந்த அத்துகோரள எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
யார் எதை கூறினாலும் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டுமாயின் உள்ளூர் தயாரிப்புகள் மூலம் உள்ளூர் வருமான பொருளாதாரத்தையும், அந்நிய செலாவணி கையிருப்பு மூலம் வெளிநாட்டு பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப வேண்டும்.
பொருளாதார நெருக்கடி
பொருளாதாரச் செயற்பாடுகளை வெறும் பேச்சளவில் மாத்திரம் வைத்திருந்தால் எதிர்காலத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்படக்கூடும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை தற்போது இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் பெறுமதி வலுவடைந்து வருகிறது.
அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை (21.07.2023) மத்திய வங்கி வெளியிட்டிருந்த நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 318.7256 ரூபாவாகவும், விற்பனை விலையானது 331.9854 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.