அமெரிக்க டொலரின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்படி நேற்றுடன் ஒப்பிடும்போது டொலரின் பெறுமதியில் சிறு வீழ்ச்சி பதிவாகியுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 369.91 ரூபாவாகவும், கொள்வனவு விலை 359.16 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி

எவ்வாறாயினும், நேற்றுடன் ஒப்பிடும்போது ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக ரூபாவின் மதிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது, அதே நேரத்தில் பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு தளம்பல் நிலையில் உள்ளது.
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 360.03 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 345.47 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 400.94 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 385.47 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது
நாங்கள் உயிர்வாழ்வதற்கு ஏன் கடவுள் எங்களைத் தேர்ந்தெடுத்தார்? நேபாளத்தில் தப்பிய தம்பதி உருக்கம் News Lankasri
ரஜினி சார் மீது இருக்கும் மரியாதைக்காக ஒதுங்குகிறேன்.. தனுஷ் ஓம் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு Cineulagam
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri