நிலையான வைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி! வங்கிகளுக்கு காத்திருக்கும் சிக்கல்(Video)
மக்களின் வைப்புக்கள் சம்பந்தமாக பாதுகாப்பான ஒரு நிலைமை இருப்பதாக கூறுகின்றனர். என்னை பொறுத்தவரையில் அந்த விடயத்தில் சந்தேகம் உள்ளது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, வைப்புக்களில் வெட்டு விழும் என்பதை விட அதற்கான வட்டி வீதங்களில் வெட்டுவிலலாம் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டில் பெறப்பட்ட கடன்களில் இலங்கை அரசு மறுசீரமைப்பு செய்தால், வாடிக்கையாளர்களின் பணத்தில் இருக்கின்ற முதல் பாதிப்பில்லாமல் கிடைக்கும் என்றும் பெறப்படுகின்ற வட்டி வீதத்தில் குறிப்பிட்டளவு குறைப்பை செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.
மக்களின் வைப்புக்கள் சம்பந்தமாக பாதுகாப்பான ஒரு நிலைமை இருப்பதாக கூறுகின்றனர். என்னை பொறுத்தவரையில் அந்த விடயத்தில் சந்தேகம் உள்ளது.
எந்த அளவிற்கு மக்களின் வைப்புக்கள் பாதுகாப்பாக இருக்கின்றன. மேலும் மத்திய வங்கியினால் அவற்றை காப்பாற்றக்கூடிய நிலைமை இருக்குமா அதற்கான சட்டதிட்டங்கள் இருந்தாலும் கூட அதற்கான வளங்கள் இருக்குமா என்பது சந்தேகமாகவுள்ளது என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |