ரூபாவின் பெறுமதியில் திடீர் வீழ்ச்சி! மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்
நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் அமெரிக்க டொலரின் விலையில் சிறு அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த இரு வாரங்களில் சடுதியாக அதிகரித்திருந்தது.
இதன்படி, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 335.68 ரூபாவாகவும், கொள்வனவு விலை 319.84 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி
எவ்வாறாயினும், கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக ரூபாவின் மதிப்பிலும் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது, அதே நேரத்தில் யூரோவுக்கு எதிராக ரூபாவின் பெறுமதியிலும் வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு தளம்பல் நிலையில் உள்ளது.
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 361.29 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 341.42 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 410.07 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 387.92 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
கணிசமான அதிகரிப்பு
நாட்டின் பொருளாதார நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அண்மைய நாட்களாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கணிசமாக அதிகரித்து வருகின்றது.
எனினும், நேற்றுடன் ஒப்பிடும் போது பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பில் மீண்டும் சரிவு ஏற்பட்டுள்ளது.


தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

ரூ. 150 கோடி மதிப்பில் தனுஷ் வீட்டின் வெளியே பார்த்திருப்பீர்கள்?- உள்ளே முழு வீட்டை பார்த்துள்ளீர்களா, வீடியோவுடன் இதோ Cineulagam

இது ரகசியமாக இருக்கட்டும்... லண்டனில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய தமிழரின் அருவருக்க வைக்கும் பின்னணி News Lankasri

40 வயதுக்கு மேல் திருமணம் செய்துகொண்டது ஏன்?- உண்மையில் எனது வயது 44 இல்லை, நடிகை ஓபன் டாக் Cineulagam
