டொலரின் பெறுமதி அதிகரித்தால் காத்திருக்கும் அபாய நிலை

Dollar to Sri Lankan Rupee Government Of Sri Lanka Economy of Sri Lanka Dollars
By Sajithra Jan 09, 2025 06:41 AM GMT
Report

இலங்கை ரூபாவின் தளம்பல் நிலையானது, இலங்கையில் வர்த்தகம் செய்யக்கூடிய வாய்ப்புக்களை பலவீனப்படுத்த கூடும் என கொழும்பு பல்கலைகழகத்தின் பொருளியல் துறை விரிவுரையாளர் கலாநிதி கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார். 

அத்துடன், எதிர்காலத்தில் டொலரின் பெறுமதி அதிகரித்துச் சென்றால் இலங்கையில் இறக்குமதி பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரிக்கும் அபாய நிலை காணப்படுவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தனியார் வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

இலங்கை பொருளாதாரத்தின் அடுத்த படிநிலை: நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

இலங்கை பொருளாதாரத்தின் அடுத்த படிநிலை: நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மேலும் அவர், "2 வருடங்களுக்கு முன்னர் ஒரு டொலரின் பெறுமதி, 233 ரூபா மாத்திரம் தான். அது 400 ரூபா வரை அதிகரித்த போதிலும் கடந்த டிசம்பர் 20ஆம் திகதி வரையிலும் மிக குறைந்த மட்டத்தில் தான் இருந்தது. 

டொலரின் பெறுமதி 

தற்போது, அதன் பெறுமதி 294.33 ரூபாவாக உள்ளது. எனவே, இது அதிகரித்து செல்லக்கூடிய நிலையில் தான் உள்ளது. எதிர்காலத்தில் டொலரின் பெறுமதி அதிகரிப்பு தொடருமானால் இலங்கைக்கு உள்ளே வருகின்ற இறக்குமதி பொருட்களின் விலைகள் அதிகரிக்கும். 

டொலரின் பெறுமதி அதிகரித்தால் காத்திருக்கும் அபாய நிலை | Dollar Price Of Sri Lankan Rupee

அதேவேளை, வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புபவர்களுக்கு இங்கு அதிக பணம் கிடைக்கும் என்பதால் அது ஒரு வாய்ப்பாக அமையும். 

இருப்பினும், டொலரினுடைய அல்லது இலங்கை ரூபாவின் தளம்பல் நிலையானது, இலங்கையில் வர்த்தகம் செய்யக்கூடிய வாய்ப்புக்களை பலவீனப்படுத்த கூடும். 

எனவே, டொலரின் பெறுமதி தொடர்ச்சியாக அதிகரித்து செல்வதையோ அல்லது குறைவடைந்து செல்வதையோ ஒரு ஆரோக்கியமான விடயமாக பாரக்க முடியாது. 

டொலரின் பெறுமதி அதிகரித்தால் காத்திருக்கும் அபாய நிலை | Dollar Price Of Sri Lankan Rupee

இந்நிலையில், டொலரின் ஏற்ற இறக்கங்களை ஒரு குறிப்பிட்ட வீச்சுக்குள்ளே வைத்து கொள்ள வேண்டியது மத்திய வங்கியின் கடப்பாடாக உள்ளது. இருப்பினும், மத்திய வங்கியால், அதனை நேரடியாக கையாள முடியாது. 

வணிக வங்கிகளிடம் இருக்கின்ற டொலர் கையிருப்புக்களை மாற்றியமைப்பதன் ஊடாக அல்லது மேலதிகமாக இருக்கின்ற டொலர்களை உள்வாங்கி மத்திய வங்கியின் கையிருப்புக்களை அதிகரிப்பதன் ஊடாக அவர்கள் இதனை செய்யலாம்” என குறிப்பிட்டுள்ளார். 

இஸ்ரேலிய மத மையங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை: பிரதமர் சுட்டிக்காட்டு

இஸ்ரேலிய மத மையங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை: பிரதமர் சுட்டிக்காட்டு

உலக சந்தையில் நிலையான தடம்: அநுர வழங்கியுள்ள ஆலோசனை

உலக சந்தையில் நிலையான தடம்: அநுர வழங்கியுள்ள ஆலோசனை

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US