2.5 மில்லியன் டொலர் மாயமான சம்பவம்! நிதியமைச்சின் அதிகாரி மர்ம மரணம்..
திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் மாயமான சம்பவம் தொடர்பில் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிதியமைச்சின் 4 அதிகாரிகளில் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குளியாப்பிட்டியவில் உள்ள தமது வீட்டின் காணியொன்றில் அவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவி பணிப்பாளராக செயற்பட்ட ரங்க நிஷாந்த என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த அதிகாரி கொலை செய்யப்பட்டாரா அல்லது தன்னைத் தானே மாய்த்துக் கொண்டாரா என்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இலங்கையில் முடிவிற்கு வரும் வங்கியொன்றின் நடவடிக்கைகள் - இன்றுடன் நிரந்தரமாக மூடப்படும் வங்கிக் கிளைகள்
சிஐடியில் முன்னிலையாக அழைப்பு
2.5 மில்லியன் அமெரிக்க டொலர் ஹெக்கர்களால் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில், இவருடன் சேர்த்து நான்கு அதிகாரிகளைப் பணியிடைநீக்கம் செய்ய நிதி அமைச்சு அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தது.
இதேவேளை, இச்சம்பவம் குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு இரண்டு தடவைகள் இந்த அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகவில்லை.
திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடன் கொடுப்பனவு மூன்றாம் தரப்பொன்றின் கைக்குச் சென்றமை தொடர்பான விசாரணைகளுக்காக, திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளரான கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும சற்றுமுன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரஜினி கமல் இணையும் படம்.. ஓடிடி வியாபாரம் இத்தனை கோடி தானா? அதிர்ச்சியில் தயாரிப்பு நிறுவனம் Cineulagam