புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்
இந்தியாவின் கெலிகட் சர்வதேச விமான நிலையத்திலிருந்து டோஹாவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் திருப்பி விடப்பப்பட்டுள்ளது.
இதனை கெலிகட் சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் திருப்பி விடப்பட்ட விமானத்தில் பணியாளர்கள் மற்றும் விமானிகள் உட்பட 188 பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு
IX 375 என்ற குறித்த விமானம், காலை 9.07 மணியளவில் கெலிகட் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளது.
இருப்பினும், கெபின் ஏர் கண்டிஷனிங் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக காலை மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அஹமதாபாத் ஏர் இந்திய விமான விபத்துக்கு பின்னர், ஏர் இந்திய நிறுவனத்தின் விமானங்களின் பாதுகாப்பு குறித்து சர்ச்சைகள் அதிகரித்து வரும் நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமையால் மேலும் கடும் விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




