ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டா? கோட்டாபயவின் தீர்மானம் தொடர்பில் விளக்கும் அமைச்சர்
நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் ஜனாதிபதியின் செயற்பாடு இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டது என அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என் அடிப்படையிலேயே தீர்மானம் எடுக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த தீர்மானம், இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டது. எனவே தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது எனவும் அமைச்சர் பீரிஸ் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவுறுத்துவதாக ஜனாதிபதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் நள்ளிரவுடன் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அரசியல் சாசனத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கான அதிகாரத்தின் அடிப்படையில் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் 18ம் திகதி முற்பகல் 10.00 மணிக்கு அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஆரம்பமாக உள்ளது.
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri