தேசிய தொலைக்காட்சிக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்தவர்களை கைது செய்யுமாறு உத்தரவு
தேசிய தொலைக்காட்சிக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போராட்டக்காரர்கள் இருவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறு பொலிஸ் தலைமையகம் பணிப்புரை விடுத்துள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கிடைக்கப்பெற்ற அறிவுறுத்தல்களின் அடிப்படையில் இதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு அறிவுறுத்தல்
அதற்கமைய, தொலைக்காட்சி வளாகத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைய முயன்ற நபர்களை வீடியோ காட்சிகள் மூலம் அடையாளம் கண்டு கைது செய்யுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நேரலை நிகழ்ச்சியில் இணைந்த இருவரில் ஒருவர் நேற்று முன்தினம் போராட்ட களத்திற்கு வந்த போது போராட்டம் இடம்பெறும் இருந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து விரட்டியடித்ததாகவும் தெரியவந்துள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் தேசிய ரூபவாஹினி: சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம் (Video) |

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
