புலிகளுக்கு எதிரான யுத்தக் குற்றங்களை விசாரணை செய்ய வேண்டுமென கோரவில்லை! – சி.வி.கே
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தக் குற்றங்களை விசாரணை செய்ய வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சி கோரவில்லையென அந்த கட்சியின் மூத்த உறுப்பினர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையிலான இணைய வழியிலான கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றது.
இதன் போது இலங்கை இராணுவமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டனர் எனக் குறிப்பிடும் ஆவணத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்ப இணக்கம் காணப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இதன்பின்னணியில் இலங்கை தமிழரசுக் கட்சி தமிழ் மக்களை தொடர்ந்தும் காட்டிக்கொடுத்து வருவதாக கூட்டமைப்பிற்கு எதிரான அரசியல் கட்சிகள் குற்றம் சுமத்தியிருந்தன.
இந்த நிலையில் விடுதலை புலிகளின் யுத்தக் குற்றங்களையும் விசாரிக்க வேண்டும் எனக் கோரும் ஆவணத்தை இலங்கை தமிழரசுக் கட்சி ஜெனிவாவிற்கு அனுப்பவில்லையென சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam