மின்னல் வேகத்தில் பரவும் கோவிட் தொற்று நுரையீரலை நேரடியாக தாக்குமா? ஆய்வில் வெளியான தகவல்
டெல்டா உள்ளிட்ட கோவிட் வைரஸ் தொற்றுகளை ஒப்பிடும்போது ஒமிக்ரோனின் பாதிப்பு தன்மை குறைவாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா மற்றும் ஜப்பானைச்சேர்ந்த விஞ்ஞானிகள் எலிகள் மீது ஒமிக்ரோன் பாதிப்பு குறித்த ஆய்வில் ஈடுபட்டனர். அதில் ஒமிக்ரோன் தொற்று மூலம் ஏற்படும் நுரையீரல் பாதிப்பு, எடை குறைவு மற்றும் இறப்பு விகிதம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது.
கோவிட் தொற்றின் பிற உருமாறிய வைரஸ்களுடன் ஒப்பிடுகையில் எலிகளின் நுரையீரலில் இருந்த ஒமிக்ரோன் பாதிப்பு பத்தில் ஒரு மடங்கு குறைவாக இருந்தது என ஆய்வில் கூறப்பட்டிருந்தது.
ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் மனித திசுக்கள் மீதான ஆய்வறிக்கையும் ஒமிக்ரோன் பாதிப்பு குறைவாக இருப்பதையே சுட்டிக்க்காட்டுகிறது.
12 நுரையீரல் மாதிரிகளில் மேற்கொண்ட ஆய்வு கோவிட் தொற்றின் முந்தைய உருமாற்றங்களைக் காட்டிலும் ஒமிக்ரோனின் பரவல் மெதுவாக இருப்பது தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
