அரச அச்சகம் அச்சிட்டுள்ள ஆவணங்கள் : வர்த்தமானியும் தயார்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான வேட்புமனு மற்றும் கட்டுப்பணப் பத்திரங்களை அச்சிடும் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக அரச அச்சக அலுவலர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கும், கட்டுப்பண பத்திரங்களுக்கான தேவையான அனைத்து ஆவணங்களும் அச்சிடப்பட்டு விநியோகிப்பதற்கு தயாராக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
வர்த்தமானி அறிவித்தல்
அச்சிடப்பட்ட தாள்கள் நேற்று காலை தேர்தல் ஆணையத்திடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், வேட்புமனுக்களை அச்சிடுவதுடன், தேர்தல் அதிகாரிகளை நியமிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று அல்லது நாளை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் எனவும் கங்கானி லியனகே குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
Spider-Man: Brand New Day முதல் நாளில் இந்தியாவில் மட்டுமே செய்துள்ள வசூல்... மாஸ் கலெக்ஷன் Cineulagam
ஹார்ட் பீட் 3 வெப் தொடரில் அனுவாக நடிக்கப்போகும் பிரபல நடிகை... நியூ என்ட்ரி, யார் தெரியுமா? Cineulagam