இலங்கையில் தங்குவதைத் தேர்வு செய்யும் மருத்துவர்கள்
வெளிநாடுகளில் பயிற்சி முடித்த அதிகமான விசேட மருத்துவர்கள் தற்போது நாட்டை விட்டு வெளியேறுவதற்குப் பதிலாக இலங்கையில் தங்குவதைத் தேர்வு செய்து வருவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள ஏறாவூர் மருத்துவமனைக்கு விஜயம் செய்தபோது அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
விஜயத்தின் போது, மருத்துவமனை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஆராய மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்துடன் அமைச்சர் கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.
அமைச்சரின் உறுதி
"முன்னதாக, வெளிநாட்டுப் பயிற்சியிலிருந்து திரும்பிய பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு போன்ற தொலைதூரப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்ட பல விசேட மருத்துவர்கள் மீண்டும் நாட்டை விட்டு வெளியேறினர்.
நாங்கள் பதவியேற்றபோது அந்த எண்ணிக்கை சுமார் 70% ஆக இருந்தது. ஆனால் இப்போது, அவர்களில் 60 முதல் 70% பேர் நாட்டிலேயே தங்கியுள்ளனர். இது ஒரு நல்ல அறிகுறி" என்று அமைச்சர் கூறியுள்ளார்.
இலங்கையில் தற்போது சுமார் 2,000 விசேட மருத்துவர்கள் இருப்பதாகவும், பயிற்சிக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் அனைத்து நிபுணர்களும் கிராமப்புறங்களில் கூட உள்ளூர் மருத்துவமனைகளில் பணிக்குத் திரும்புவதை உறுதிசெய்ய அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மருத்துவர்களை நாட்டில் வைத்திருக்கவும், பற்றாக்குறையை விரைவாக தீர்க்கவும் தேவையான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் வழங்கும் என்றும் அவர் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




