நாடு கடும் நெருக்கடி - சுகாதார மாபியாவின் பொறுப்பற்ற செயற்பாடுகள்
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் நெருக்கடியால் இலங்கை உட்பட உலக நாடுகள் கடும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன.
இந்நிலையில் தற்போதைய நெருக்கடியை சமாளிக்க அநுர அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
முதற்கட்டமாக ஒவ்வொரு புதன்கிழமைகளில் விசேட அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முறையான சலுகைகள்
இதற்கமைய சுகாதாரத்துறையை அத்தியாவசிய சேவையாகக் கருதுவதானால், அதனை வழங்கும் ஊழியர்களுக்கும் முறையான சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என சுகாதார சேவை தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் அண்மைக்கால நடவடிக்கைகள் குறித்து கவலை வெளியிட்டுள்ள அவர், சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
எரிபொருள் ஒதுக்கீடு
இதன்படி புதன்கிழமை போன்ற பொது விடுமுறை நாட்களில் சுகாதார ஊழியர்கள் பணிக்கு அழைக்கப்படும் போது, அவர்களுக்குரிய விடுமுறை கொடுப்பனவு முறையாக வழங்கப்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

ஏனையவர்களைப் போன்று அதே அளவிலான எரிபொருள் ஒதுக்கீட்டை சுகாதார ஊழியர்களுக்கும் வழங்குவது முறையற்றது.
தடையில்லா சேவையை உறுதிப்படுத்த சுகாதாரத் துறைக்கு என பிரத்தியேக எரிபொருள் ஒதுக்கீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
வீட்டிற்கு வந்த மனைவியை பார்த்து பாண்டியன் சொன்ன வார்த்தை, ஷாக்கான கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
கப்பலை அனுப்புவதாக சொல்லவில்லை... ட்ரம்பின் பேச்சுக்கு உடனடியாக மறுப்பு தெரிவித்த ஸ்டார்மர் News Lankasri
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
எனக்கு நயன்தாரா வேணும்...சிஎம் கொடுப்பாரா?.. முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. Cineulagam