இலங்கை வைத்தியர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை
எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக வைத்தியர்கள் வெளிமாவட்டங்களில் கடமைக்கு சமூகமளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் வைத்தியர்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவு போதுமானதாக இல்லை என சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் டொக்டர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கை
வைத்தியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான முறையான நடைமுறையை வகுக்குமாறும் டாக்டர் பிரசாத் கொழும்புகே அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உபகரணங்களின் பற்றாக்குறை, எரிபொருள் நெருக்கடியால் சுகாதார ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் மேலதிக நேர வேலைநிறுத்தம் காரணமாக சுகாதார சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உப தலைவர் டொக்டர் நிஷாந்த சமரவீர தெரிவித்துள்ளார்.

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam
