கட்டுகஹஹேன வைத்தியசாலையில் உள்நோயாளிகளுக்கான சிகிச்சை இடைநிறுத்தம்
களுத்துறை - மத்துகம, கட்டுகஹஹேன பிரதேசத்தில் வைத்தியசாலையின் மூன்று வைத்தியர்கள்களுக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக உள்நோயாளிகளுக்கான சிகிச்சையை நிறுத்துவதற்கு வைத்தியசாலை நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
குறித்த வைத்தியசாலையில் 5 பிரதான வைத்தியர்கள் இருந்தும் அவர்களில் ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் வைத்தியர் ஒருவர் பதவி விலகல் கடிதம் கொடுத்துள்ளதாகவும், மற்றொருவர் சுகயீன விடுப்பு எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், 9 நாட்கள் இரவும் பகலும் தொடர்ச்சியாக சேவையை மேற்கொண்ட குறித்த வைத்தியசாலையின் பிரதம வைத்தியர் ரஞ்சித் திஸாநாயக்கவும் சுகவீனமடைந்து கடந்த 16ஆம் திகதி நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
உள்நோயாளி சிகிச்சை
இதனால் வெளிநோயாளிகள் பிரிவில் மட்டும் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்படுவதால் உள்நோயாளிகளாக சிகிச்சையை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் களுத்துறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சியிடம் வினவிய போது, இந்த வைத்தியசாலையில் உள்நோயாளிகளுக்கான சிகிச்சை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
எனினும் இந்த வைத்தியசாலையில் 15 முதல் 25 நோயாளர்கள் உள்நோயாளிகளாகவும், வெளிநோயாளர் பிரிவில் தினமும் 150 நோயாளர்களும் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

காஷ்மீர் விவகாரத்தில் யாரும் மத்தியஸ்தம் செய்ய தேவை இல்லை - டிரம்ப் கோரிக்கையை நிராகரித்த மோடி News Lankasri

இனியா செய்த விஷயம்.. ஷாக் ஆன வில்லன்! நம்பர் 1 ட்ரெண்டிங்கில் பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ Cineulagam
