பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்தியர்கள்
காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் கணக்காளருக்கு எதிராக இன்று காலை 8.00 மணி முதல் அடையாள பணிப்பகிஷ்கரிப்பை வைத்தியர்கள் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய வைத்தியர்கள் உட்பட சுகாதார ஊழியர்களின் சம்பளத்தில் சுமார் 25 சதவீதம் தன்னிச்சையாக கழித்தமைக்காக கணக்காளருக்கு எதிராக இந்த தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் இணைச் செயலாளர் வைத்தியர் தினேஷ் யாப்பா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அவசர சிகிச்சைப் பிரிவுகள், குழந்தைகள் பிரிவுகள், புற்றுநோய் பிரிவுகள் மற்றும் சிறுநீரகப் பிரிவுகளில் சிகிச்சைகள் வழமைபோல் நடைபெறுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
கணவரை பிரிந்த நிலையில் ஹன்சிகா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. அதுவும் யாருடன் தெரியுமா? Cineulagam