பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சந்தையில் விற்பனை செய்யப்படும் குடிநீர் போத்தல்களில் மீண்டும் நீர் நிரப்புவது பொருத்தமானதல்ல என கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று(08.08.2023) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,“ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட போத்தல்களில் மீண்டும் நீர் நிரப்புவதை தவிர்த்து, கண்ணாடி அல்லது தரமான போத்தல்களை பயன்படுத்துவது மிகவும் பொருத்தமானது.
இரசாயனங்கள் தண்ணீரில் கலக்கும்
குறித்த குடிநீர் போத்தல்களில் கடுமையான சூரிய ஒளிபடும் நிலையில் சில இரசாயனங்கள் தண்ணீரில் கலக்கப்படுவதற்கான சாத்தியம் காணப்படும்.
பாடசாலைகளில் ஆசிரியர்கள் இந்த விடயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இந்த நிலையில், பாடசாலை மாணவர்கள் முடிந்தவரை வீட்டில் இருந்து குடிநீரை எடுத்துச் செல்வதற்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா





ஆசிய நாடொன்றிற்கு எலோன் மஸ்க் விடுத்த கடும் எச்சரிக்கை... 1 மில்லியன் மக்களை இழக்கலாம் News Lankasri

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri
