மர்மமான முறையில் உயிரிழந்த வைத்தியர்! விசாரணையில் வெளியான தகவல்
தம்புத்தேகம அரச வைத்தியசாலையில் பணியாற்றிய 35 வயதுடைய திருமணமான வைத்தியர் ஒருவர் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தம்புத்தேகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தம்புத்தேகம வைத்தியசாலையின் சிறுநீரக பிரிவில் கடமையாற்றிய கொட்டப்பிட்டி நாரம்மல பகுதியைச் சேர்ந்த அமில சதகெலும் திசாநாயக்க (35) என்ற வைத்தியரே உயிரிழந்துள்ளார்.
மூன்று நாட்களாக வைத்தியர் பணிக்கு வருகை தராமையினால் வைத்தியசாலை ஊழியர் ஒருவர் வைத்தியரின் வீட்டிற்கு சென்று பார்த்த போது, அவரது அறையில் வைத்தியர் இறந்து கிடப்பதைக் கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெளிப்புற காயங்கள் இல்லை

உயிரிழந்த வைத்தியரின் மனைவி குருநாகல் வைத்தியசாலையில் பல் வைத்தியராக கடமையாற்றி வருவதுடன் குறித்த வைத்தியர் தனது ஐந்து வயது மகளுடன் அந்த பிரதேசத்தில் வசித்து வருகின்றார்.
உயிரிழந்த வைத்தியர் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் தனியாக வசித்து வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் அவர் உயிரிழந்திருக்க வேண்டும் எனவும் அவரது சடலத்தில் வெட்டுக்காயங்கள் போன்ற வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri