வைத்தியர் சுல்தான் மொஹிதீன் கொலை விவகாரம்: நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
வவுனியா பகுதியில் வைத்து வைத்தியர் சுல்தான் மொஹிதீனை சுட்டுக் கொன்றமைக்காக குற்றவாளியாக காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட, நெடுமாறன் எனும் பெயரால் அறியப்படும் சிவநாதன் பிரேமநாத்தை விடுவித்து மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று(20) உத்தரவிட்டது.
மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான சசி மகேந்திரன், அமல் ரணராஜா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை அறிவித்தது.
ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா, ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா ஆகியோரின் வாதங்களை ஏற்றே நீதிமன்றம் இந்த தீர்ப்பை அறிவித்தது.
2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளொன்றில் வவுனியாவில் வைத்து வழக்குத் தொடுநர் அறிந்திராத மேலும் மூவருடன் சேர்ந்து சுல்தான் மீரா மொஹிதீன் என்பவருக்கு மரணத்தை ஏற்படுத்தியதாக 2952/2020 எனும் இலக்கத்தின் கீழ் வவுனியா மேல் நீதிமன்றில் சிவநாதன் பிரேமநாத் அல்லது நெடுமாறன் என்பவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.
மேன் முறையீடு
2015ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி இது தொடர்பில் சட்ட மா அதிபர் குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்திருந்த நிலையில், நீண்ட விசாரணைகளின் பின்னர் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் திகதி அப்போதைய வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இலஞ்செழியன் சிவநாதன் பிரேமநாத் அல்லது நெடுமாறன் என்பவரை குற்றவாளியாக கண்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதனையடுத்து, குறித்த தீர்ப்புக்கு எதிராக கெளரி சங்கரி சட்ட நிறுவனம் சார்பில் சீ/ஏ/எச்.சி.சி./276/2023 எனும் இலக்கத்தின் கீழ் மேன் முறையீடு செய்யப்பட்டது.
சட்டத்தரணி தர்மஜாவின் ஆலோசனை பிரகாரம் இந்த வழக்கில் சட்டத்தரணி ஓஷதி ஹப்பு ஆரச்சியுடன் ஜனாதிபதி சட்டத்தரணிகளான கே.வி. தவராசா மற்றும் அனில் சில்வா ஆகியோர் முன்னிலையாகினர்.
சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அசாத் நவாவி முன்னிலையானார். இந்த நிலையிலேயே, இன்று இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 8 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
