கஞ்சா செய்கையில் ஈடுபட்ட கலாநிதி ஒருவர் கைது
கஞ்சா செய்கையில் ஈடுபட்ட கலாநிதி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஆய்வுகளுக்காக தனமல்வில பொதாகம பகுதியில் கஞ்சா செய்கையில் ஈடுபட்ட கல்வியியலாளர் கலாநிதி வசந்த சேனவெலியங்கவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுமதியின்றி கஞ்சா செடிகளை வளர்த்த குற்றச்சாட்டின் பேரில் கலாநிதி வசந்த கைது செய்யப்பட்டுள்ளார்.
கலாநிதி வசந்த, கஞ்சா தொடர்பில் இரண்டு நூல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கஞ்சா செடிகளை ஆய்வு நோக்கத்திற்காக வளர்ப்பதற்கு அனுமதி வழங்குமாறு கோரி கலாநிதி வசந்த, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு அண்மையில் கடிதம் ஒன்றின் மூலம் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கஞ்சா தொடர்பில் அருங்காட்சியகம் ஒன்றை நிர்மானிப்பதற்கு கலாநிதி வசந்த திட்டமிட்டிருந்தார் என அவரது உதவியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam