வருட இறுதி ஒரு மணிநேரத்தில் இலங்கையில் அச்சிடப்பட்ட பெருந்தொகையான பணம்! வெளியானது விபரம்
புதுவருட கொண்டாட்டத்திலும், எரிவாயு, பால்மா பெற்றுக் கெளா்வதற்கான வரிசையில் மக்கள் இருந்த நிலையில் அரசாங்கம் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி இரவு 66,500 இலட்சம் ரூபா பணம் அச்சிட்டுள்ளது என என முன்னாள் தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன்(Keerthi Tennakoon) தெரிவித்துள்ளார்.
அதன் பிரகாரம் அரசாங்கம் கடந்த வருடம் முழுவதும் 678.33 பில்லியன் ரூபா பணம் அச்சிட்டிருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாட்டு மக்கள் நத்தார் மற்றும் புதுவருட கொண்டாட்டத்திலும், எரிவாயு, பால்மா பெற்றுக் கொள்வதற்காக வரிசையிலும் இருக்கும் நிலையில் அரசாங்கம் 2021ஆம் ஆண்டின் இறுதித் தினமான 31ஆம் திகதி 66,500 இலட்சம் ரூபா பணம் அச்சிட்டுள்ளது.
அதன்படி அரசாங்கம் கடந்தவருடம் 2021 ஜனவரி முதலாம் திகதியில் இருந்து டிசம்பர் 31ஆம் திகதி வரையான ஒரு வருட காலத்தில் மொத்தமாக 678.33 பில்லியன் ரூபா பணம் அச்சிட்டிருக்கின்றது.
இலங்கை மக்கள் எரிவாயு, பால்மா, அரிசி வரிசைகளில் இருக்கும் நிலையில் வருடத்தின் இறுதி தினத்தின் இறுதி ஒரு மணி நேரத்தில் 66500 இலட்சம் ரூபா அச்சிட்டிருக்கின்றது.
மேலும் பணம் அச்சிடுவதற்கு ஒரு தினத்துக்கு முன்னர் 1500 மில்லியன் டொலர் நாட்டுக்கு வந்ததாக தெரிவித்து எண் மந்திரம் ஒன்றை காட்டிய அரசாங்கம் மறுதினம் இவ்வாறு பணம் அச்சிடுவதால் அதிகரித்திருக்கும் பொருட்களின் விலை மேலும் பாரியளவில் அதிகரிக்கப்படும்.
அரசாங்கம் கடந்த வருடத்தில் 6783300 இலட்சம் ரூபா பணம் அச்சிட்டிருக்கின்றது. இலங்கை வரலாற்றில் ஒருபோதும் இவ்வாறு பணம் அச்சிடப்பட்டதில்லை.
அத்துடன் இன்று பணவீக்கம் என்பது இலக்கத்தில் மாத்திரமாகும். நாள் ஒன்றுக்கு இரண்டு மூன்று தடவைகள் பொருட்களின் விலை அதிகரிக்கப்படுகின்றது.
இந்த நிலைமையை கட்டுப்படுத்த அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் எடுப்பதில்லை. அதற்காக அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை. அதனால் நாளுக்கு நாள் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து செல்கின்றது. இதற்கு அரசாங்கத்திடம் இருக்கும் ஒரே தீர்வு பணம் அச்சிடுவதாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

திருப்பி அடிக்கும் இந்தியா., பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் News Lankasri

25 நிமிடம், 24 தாக்குதல்கள்: குறிவைக்கப்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள், 70 பேர் பலி! பாகிஸ்தானில் இந்தியா அதிரடி News Lankasri
