செல்பி புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட வேண்டாம் என பொலிஸார் எச்ச்ரிக்கை
பண்டிகைக் காலங்களில் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, அது தொடர்பான செல்பி புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இது திருடர்கள் வீடுகளை குறி வைக்கக்கூடும் என்பதனால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு. வுட்லர் வலியுறுத்தியுள்ளார்.
விடுமுறையை கழிப்பதற்காக வெளி இடங்களுக்கு செல்வோர், அந்த இடங்களை புகைப்படங்களாக சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
இதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் திருடர்கள் வீடுகளுக்குள் நுழைந்து கொள்ளையில் ஈடுபடுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அதிக நாட்கள் வெளியில் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டால், உங்கள் வீட்டினை அண்மித்த பொலிஸ் நிலையத்தில் தகவல் வழங்கிச் சென்றால் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட வாய்ப்பாக அமையும் என்று ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.