புலனாய்வு பிரிவினரை அனுப்பி கூட்டங்களை உளவு பார்க்க வேண்டாம்! ஜே.வி.பி கோரிக்கை
எமது கட்சியின் கூட்டங்கள் பற்றி அறிந்து கொள்வதற்கு புலனாய்வுப் பிரிவினரை அனுப்பி வைக்க வேண்டாம் என ஜே.வி.பி.அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
தமது கட்சியினால் நடாத்தப்படும் கூட்டங்களை கண்காணிப்பதற்கு புலனாய்வுப்பிரிவினரை அனுப்பி வைக்கத் தேவையில்லை, எனக்கு தொலைபேசி அழைப்பு எடுத்தால் அனைத்து விபரங்களையும் வழங்குவேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டம் நடாத்தப்பட்ட விஹாரைக்கு நான்கு தடவைகள் புலனாய்வுப் பிரிவினர் சென்று விசாரணை நடத்தியுள்ளனர், கூட்டங்களை ஏற்பாடு செய்யும் ஏற்பாட்டாளர்களின் வீடுகளுக்கும் சென்று விசாரணை நடாத்தப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri