முகத்தை மறைத்து அணியும் கண்ணாடி கவசத்தை பரிந்துரைக்கவில்லை!
கோவிட் -19 வைரஸில் இருந்து பாதுகாப்பை பெற, முகக்கவசத்துக்கு மாற்றீடாக, முகத்தை மறைத்து அணியும் கண்ணாடி கவசத்தை அணிய பரிந்துரைக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அது பொருத்தமானது அல்ல என்று இலங்கை சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. நீர்த்துளிகள் நேரடியாக முகத்தில் இறங்குவதைத் தடுக்கும் பொருட்டு ஒருவர் கண்ணாடி முகம் கவசம் அணிவது பொருத்தமானது.
தும்மல் மற்றும் இருமல் ஆகியவற்றிலிருந்தும் அது பாதுகாப்பை வழங்குகிறது. "இருப்பினும், மற்றவர்களின் சுவாச துளிகளை தடுப்பதில் இருந்து அது ஒருவரை பாதுகாக்காது என்று அப்பணியாகம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே முழு பாதுகாப்பைப் பெற முகக் கவசத்தை அணிவது மிகவும் பொருத்தமானது. மேலும், கோவிட் -19 இலிருந்து மக்களை முகக்கவசம் மட்டும் பாதுகாக்காது என்பதால், முகக் கவசங்கள் மட்டும் அணிவதை நம்ப வேண்டாம் என்றும் பணியகம் வலியுறுத்தியது.
பெரிய கூட்டங்களைத் தவிர்ப்பது மற்றும் சமூக தூரத்தை பராமரிப்பது மிக முக்கியமானது என்று இலங்கை சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 7 மணி நேரம் முன்

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan
