மறக்க நினைக்கும் வேதனையான சம்பவத்தை நினைவூட்ட கூடாது: - விசேட மேல் நீதிமன்ற நீதிபதி
நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்தில் ஈஸ்டர் நாள் ஆராதனை நடைபெற்றுக்கொண்டிருந்த போது, பெரிய சத்தத்துடன் முழு தேவாலயமும் புகையால் மூடிக்கொண்டதாக அந்த தாக்குதல் நடந்த நேரத்தில் திருப்பலி பூசையை ஒப்புக்கொடுத்துக்கொண்டிருந்த பங்கு தந்தை வணக்கத்திற்குரிய அன்டன் சுதர்சன சமீர ரெட்றிகோ கடுமையாக உணர்ச்சிவசப்பட்டதால், கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் போயுள்ளது.
ஈஸ்டர் தினத்தில் நடந்த இந்த தாக்குதலில் எத்தனை பேர் வரை உயிரிழந்தனர் என முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுதர்சன சில்வா கேட்ட போது, அந்த சம்பவத்தை மீண்டும் பங்கு தந்தைக்கு நினைவூட்ட வேண்டாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்துள்ள நீதிபதி ஆதித்திய பட்டபெந்தி, ஒரு மறக்க நினைக்கும் வேதனையான சம்பவத்தை மீண்டும் நினைவூட்டுவது அர்த்தமற்றது எனக் கூறியுள்ளார்.
கத்தோலிக்கர்கள் உட்பட கிறிஸ்தவர்களின் உன்னதமான பண்டிகையான ஈஸ்டர் தினத்தில் கத்தோலிக்க தேவாலயங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படவுள்ளது என பொலிஸாரோ, பாதுகாப்பு தரப்பினர் அதிகாரியோ, வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையோ தனக்கு அறிவித்திருக்கவில்லை எனக் கூறியுள்ள பங்கு தந்தை அன்டன் சுதர்சன சமீர ரெட்றிகோ, சம்பவம் நடக்கும் போது தேவாலயத்தில் 800 முதல் ஆயிரம் பேர் வரை தேவாலயத்திற்குள் இருந்ததுடன் வெளியிலும் சிலர் இருந்தனர் என தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சுமத்தி, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் சாட்சியமளிக்கும் போதே பங்கு தந்தை இதனை கூறியுள்ளார்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கு எதிராக சட்டமா அதிபர் தொடர்ந்துள்ள இந்த வழக்கு மூன்று நீதிபதிகள் அடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் புனித செபஸ்தியார் தேவாலயத்தின் பங்கு தந்தை இன்று சாட்சியமளித்தார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

நீச்சல் குளத்தில் நெருக்கமாக இருக்கும் ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்ட பாவனி! வாயடைத்துப்போன ரசிகர்கள் Manithan
