ஊடகவியலாளர்களை சீ.ஐ.டிக்கு அழைக்க வேண்டாம் - பிரதமர்
சதோச நிறுவனத்தில் நடந்துள்ளதாக கூறப்படும் வெள்ளை பூண்டு மோசடி சம்பந்தமான செய்திகளை வெளியிட்ட ஊடகவியலாளர்களை குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அழைப்பதை தவிர்க்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச அந்த திணைக்களத்தின் உயர் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் டளஸ் அழகப் பெரும இதனை கூறியுள்ளார்.
சதோச நிறுவனத்தின் அதிகாரிகள் மேற்கொண்டதாக கூறப்படும் வெள்ளை பூண்டு மோசடி தொடர்பாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்ததுடன் அந்த முறைப்பாடு குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த மோசடி தொடர்பான செய்திகளை வெளியிட்ட நாட்டின் தேசிய பத்திரிகைகளில் ஆசிரியர்கள் உட்பட ஊடகவியலாளர்கள் அனைவரையும் இன்று குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
