இரண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல வேண்டாம்! அமெரிக்கா
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக இரண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு அமெரிக்க சுகாதார துறையினர், அந்நாட்டுக்கு அறிவித்துள்ளனர்.
அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மத்திய நிலையம், அமெரிக்க ராஜாங்க திணைக்களம் ஆகிய இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளன.
இதனடிப்படையில், டென்மார்க் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு அமெரிக்கர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஐரோப்பிய மிகப் பெரிய பொருளாதார வளமிக்க நாடான ஜேர்மனியில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை துரிதமாக அதிகரித்து வருகிறது.
ஜேர்மனிய சுகாதாரத்துறையினர் நோய் பரவலை கட்டுப்படுத்த எடுத்துள்ள நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என ஜேர்மனிய சான்செலர் ஏஞ்சலா மேர்க்கல் (Angela Merkel) தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியில் உள்ள மருத்துவமனையில் கோவிட் தொற்றாளர்கள் அனுமதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. அத்துடன் அந்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.