சில பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்..! விடுக்கப்பட்ட எச்சரிக்கை
அனர்த்தம் ஏற்பட்ட பகுதிகளுக்குச் செல்வது மிகவும் ஆபத்தானது என்று அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
இந்த நீர் பலத்த நீரோட்டத்துடன் பாய்வதால், பொதுமக்கள் குளிப்பதையோ அல்லது வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தொடர்ந்தும் விழிப்புணர்வு தேவை
பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், 117 என்ற தொலைபேசி எண்ணை அழைத்து பேரிடர் மேலாண்மை மையத்திற்குத் தெரிவிக்குமாறும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அதிக மழைப்பொழிவு காரணமாக மண் நிரம்பியுள்ளதாக தெரிவித்துள்ள அவர், தொடர்ந்து விழிப்புணர்வு தேவை. எனவே சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டால் உடனடியாக வெளியேறுமாறு பொதுமக்களுக்கும் அவர் அறிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த நிவாரணக் குழுக்கள் செய்து வரும் பணிகளைப் பாராட்டியதொடு, அவர்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |