விரும்பியபடி சிறுவர்களுக்கு விட்டமின் சி கொடுக்காதீர்கள்! பெற்றோர்களுக்கான அறிவித்தல்
பெற்றோர், தமது விருப்பப்படி சிறுவர்களுக்கு விட்டமின் சி மாத்திரைகள் வழங்குவது ஏற்புடையதல்ல என சிறுவர்களுக்கான லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் ஆலோசகர், வைத்திய கலாநிதி நளின் கிதுல்வத்த கூறியுள்ளார்.
இந்த நாட்களில் சிறுவர்களுக்கு விட்டமின் சி மாத்திரைகளை வழங்குவது பொருத்தமானது என்று சமூக ஊடக பதிவுகள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
சமூக ஊடகங்களில் பல்வேறு வகையான மருந்துகள் குறிப்பிட்டுள்ள போதிலும், மருத்துவ ஆலோசனை இல்லாமல் சிறுவர்களுக்கு எந்த மருந்தும் கொடுக்கக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.
சிறுவர்களுக்கு தன்னிச்சையாக மருந்து கொடுப்பது மற்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சிறுவர்களுக்கு காய்ச்சல் இருந்தால், அவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவு பெரசிட்டமோல் கொடுக்கமுடியும்.
எனினும் காய்ச்சல் அதிகமாக இருந்தால், ஒரு மருத்துவமனைக்கு விரைந்து செல்வது அல்லது மருத்துவரை அணுகுவது மற்றும் மருத்துவரின் அறிவுறுத்தல்களின்படி மட்டுமே கொடுக்கக்கூடிய மருந்துகளை வழங்குவது சிறந்தது என்று வைத்தியர் கிதுல்வத்த தெரிவித்துள்ளார்.

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
