சுயநிர்ணயக் கொள்கை ஆவணத்தில் கையெழுத்திட முடியாது- திகாம்பரம் (காணொளி)
இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்கான 13வது திருத்தம் தொடர்பில் தமிழ் கட்சிகள் தயாரித்திருக்கும் ஆவணத்தில் தாம் கையொப்பமிடமுடியும். எனினும் அதற்கு அப்பால் சுயநிர்ணய உரிமைகள் தொடர்பான விடயங்களும் குறித்த ஆவணத்தில் வலியுறுத்தப்படுமானால், அதில் கையொப்பமிடமுடியாது என்று முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்
தென்னிலங்கையில் தமிழர்கள் சிங்களவர்கள் மத்தியில் வசிக்கின்ற நிலையில் சுயநிர்ணய உரிமைகள் குறித்த கருத்தை தம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று அவர் இன்று ஹட்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது குறிப்பிட்டார்.
இதேவேளை சிறுதோட்ட உாிமையாளர்களாக பெருந்தோட்ட தொழிலாளர்களை மாற்றுவதே தமது இலக்காகும்.
எனவே அன்றும் இன்றும் தாம் கூட்டு உடன்படிக்கையை எதிர்ப்பதாக அவர் தெரிவித்தார்.



