மக்கள் விரும்பும் சுபீட்சத்தை வழங்குவேன் - கிழக்கு மாகாண ஆளுநர் (Photos)
இலங்கைக்கு கூடுதலான அரிசியை வழங்கும் அம்பாறை மாவட்ட மக்கள் விரும்பும் சுபீட்சத்தை அடைவதற்கு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் (Anuradha Yahampat) தெரிவித்துள்ளார்.
அம்பாறை தீககாமினி மாவத்தையில் மாவட்ட ஆளுனர் அலுவலகத்தை இன்று(9) திறந்து வைத்து உரையாற்றும் போதே இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவர் இங்கு மேலும் உரையாற்றுகையில் கிழக்கு மாகாணம் இலங்கையின் மிக நீளமான மாகாண சபையாகும், மாகாணத்தில் உள்ள அனைத்து அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் திருகோணமலையை தளமாகக் கொண்டவை.
மாகாணசபை கலைக்கப்பட்டதன் காரணமாக மாகாண அரச பொறிமுறையில் மாவட்ட மட்டத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பு இல்லை.
மாகாண சபையின் அனைத்து நடவடிக்கைகளும் ஆளுநர் அலுவலகத்தின் ஊடாகவே கண்காணிக்கப்படுகின்றனஅம்பாறை மாவட்டத்தின் தெஹியத்தகண்டி, மஹா ஓயா, பதியத்தலாவ போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த இந்த அப்பாவி மக்கள் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக மிகவும் சிரமத்துடன் திருகோணமலைக்கு வர வேண்டியுள்ளது.அந்த அமைப்பை இவ்வலுவலகத்திறப்பின் பின்னர் மாற்றமடையும் .
இன்று முதல் அம்பாறை மக்கள் தமது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள திருகோணமலைக்கு வர வேண்டிய அவசியமில்லை.
இன்று முதல் இந்த அலுவலகத்தில் இருந்து பணிகள் மேற்கொள்ளப்படும்.இலங்கைக்கு கூடுதலான அரிசியை வழங்கும் மாவட்டம் அம்பாறையாகும் ஆனால் இம்மாவட்டம் எதிர்பார்த்த செழிப்பை இன்னும் அடையவில்லை என்று நான் கருதுகின்றேன்.
எனவே, இந்த அலுவலகத்தின் மூலம் அந்த செழுமைக்கான நோக்கங்களை அடைய அடித்தளமிடப்பட்டுள்ளது.
இன்று நமது பகுதியில் இயற்கை விவசாயம் செயற்திட்டம் தொடங்கியுள்ளது. ஜனாதிபதியின் சுபீட்சத்தின் தொலைநோக்குப் பார்வையின் ஊடாக செழிப்பு கிழக்கு எனும் விசேட தொலைநோக்கு பார்வையை அடுத்த வருடம் நடைமுறைப்படுத்தவுள்ளோம்.
எமது மாகாணத்தில் போதுமான இயற்கை வளங்கள் உள்ளன. குறிப்பாக எமது மாகாணத்தில் நல்ல சூரிய சக்தியை உற்பத்தி செய்யக்கூடிய வளங்கள் உள்ளன.
நமது பகுதியில் உள்ள பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளின் கூரைகளைப் பயன்படுத்தி சூரிய சக்தியை உருவாக்கும் புதிய திட்டத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம்.
இதன் மூலம் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்தல் வேண்டும்இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.எம்.எல் பண்டாரநாயக்க ஆளுநரின் செயலாளர் எல்.பி. மதநாயக்க மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் சாமர நிலங்க, மாகாண முன்பள்ளி பணியகத்தின் தலைவர் பிரதீப்
தென்னகோன், அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்கள், உள்ளுராட்சி நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் தந்த பெருவலி 13 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022