நரகாசுரணை வதம் செய்யாமல் விட்டிருக்கலாம்! இலங்கை மக்களின் ஆதங்கம்(Video)
தீபாவளி என்பது தமிழர்கள் கொண்டாடும் மிகப்பெரிய பண்டிகை. இலங்கை, இந்தியா உள்ளிட்ட உலக வாழ் தமிழர்கள் அனைவரும் கொண்டாடும் சந்தோசத்தின் பண்டிகை என்று கூறலாம்.
இப்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட இலங்கை வாழ் தமிழர்கள் எவ்வாறு ஆயத்தமாகின்றனர் என்பது தொடர்பில் எமது குழுவினர் ஒரு கள விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர்.
ஆனால், இதன்போது மக்களிடத்தில் மகிழ்ச்சியை தவிர்த்து விரக்தி நிலை காணப்பட்டதை எம்மால் தெரிந்துக்கொள்ள முடிந்தது.
இலங்கையில் இப்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையில், பொதுமக்கள் தமது அன்றாட வாழ்வை கொண்டு நடத்துவதற்கே திண்டாடி வருகின்றதுடன், இந்த நிலைகளை பார்த்தால் கிருஷ்ணர் நரகாசுரணை கொலை செய்யாமலேயே இருந்திருக்கலாம் என்று இலங்கை மக்கள் வருந்துகின்றனர்.
இது குறித்து முழு காணொளியை கீழே காணலாம்..