இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் தீபாவளிக் கொண்டாட்டம்
இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்படும் வருடாந்த தீபாவளி கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு பம்பலப்பிட்டிய கதிரேஷன் கோவிலில் நடைபெற்றன.
பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, கடற்தொழில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ், கடற்தொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் விருந்தினர்களாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
தீபாவளிக் கொண்டாட்டம்
பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய உள்ளிட்ட பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர்.

பம்பலப்பிட்டிய கதிர்சேஷன் கோவிலின் பிரதான குருக்கள் ஒரு சமயச் சடங்கை நிகழ்த்தினர். இதன்போது பல்வேறு கலாசார அம்சங்களும் இடம்பெற்றிருந்தது.

