நாட்டில் அதிகரித்துள்ள புதுமணத் தம்பதிகளின் விவாகரத்து வழக்குகள்
நாட்டில் தற்போது புதுமணத் தம்பதிகளிடையே விவாகரத்து அதிகரித்து வருவதாக பதிவாளர் நாயக திணைக்களத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலை 2020 ஆம் ஆண்டிலிருந்து அதிகரித்துள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
அண்மைக்காலமாக திருமணம் செய்துகொள்ளும் மக்களிடையே இரண்டு மூன்று வருடங்கள் என்ற குறுகிய காலத்திற்குள் விவாகரத்து செய்யும் போக்கு காணப்படுவதாக பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சிவில் பதிவு பிரிவின் சிரேஷ்ட பிரதி பதிவாளர் நாயகம் சட்டத்தரணி லக்ஷிகா கணேபொல தெரிவித்துள்ளார்.
நீதிமன்றங்களில் பெறப்பட்ட தகவல்
மேலும், மாவட்ட நீதிமன்றங்களில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக தம்பதியினரிடையேயான கருத்து முரண்பாடே விவாகரத்துக்கான முக்கிய காரணம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

துபாயில் இந்தியர்களை வாளால் வெட்டிக்கொன்ற பாகிஸ்தானியர்: அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள் News Lankasri

என்ன கொடுமை இது, நான் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.. எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் புலம்பல் Cineulagam

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri
