வவுனியாவில் நிரந்தர நியமனத்தை தடுத்த பிரதேச செயலாளர்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
வவுனியாவில் நிரந்தர நியமனத்தைத் தடுத்த பிரதேச செயலாளருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரசாங்கத்தினால் கடந்த வருடம் தற்காலிக நியமனம் வழங்கப்பட்டது.
அதனை தடுத்த பிரதேச செயலாளருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அம்முறைப்படில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பயிலுனராக கடமையாற்றிவரும் குறித்த உத்தியோகத்தரரின் நிரந்தர நியமனம் கிடைக்கப் பெற்றும் அதனை வழங்காது தடுத்து வருகிறார்.

குறித்த உத்தியோகத்தரை பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதுடன் இதனால் தனக்கு வழங்கப்பட்ட அரசாங்க
நிரந்தர நியமனம் தடுக்கப்பட்டுத் தட்டிக்கழிக்கும் நடவடிக்கையினை பிரதேச
செயலாளர் திட்டமிட்டு மேற்கொண்டு வருகிறார்.
பாதிக்கப்பட்ட எமக்கு நீதியை பெற்றுத்தரவும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 வருடத்திற்கு முன் விபத்தில் உயிரிழந்த அசுரன் பட நடிகர்... திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை, வெளிவந்த உண்மை Cineulagam