வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் கிவுல் ஓயா திட்டம் தொடர்பான பிரேரனை நிறைவேற்றம்
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வின் போது கிவுல் ஓயா திட்டம் தொடர்பான பிரேரணையால் பதற்ற நிலை ஏற்பட்டது.
அரசாங்கத்தினால் அதிகளவிலான நிதி ஒதுக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றமான கிவுல் ஓயா திட்டத்தினை எதிர்க்கும் வகையிலான பேரணி ஒன்றினை வலி. கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் சபையின் ஒப்புதலுக்காக கொண்டு வந்துள்ளார்.
இதன்போது, ஆளும் கட்சியினருக்கும் எதிர்க்கட்சியினருக்கு இடையில் பலத்த வாக்குவாதம் இடம்பெற்றது.
திவில் ஓயா திட்டம்
மகாவலி திட்டம், வெலி ஓயா திட்டம் போன்று திட்டமிட்டு தமிழ் மக்களின் பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் திட்டமாகவே கிவுல் ஓயா திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது என சபையில் சுட்டி காட்டிய தவிசாளர், கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிரான பிரேரணியை சபைக்கு கொண்டு வந்துள்ளார்.

இதனை தேசிய மக்கள் கட்சியின் 9 பிரதேச சபை உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர்.
ஏனைய தமிழ் கட்சிகள் அனைத்தும் குறித்த திட்டம் தமிழ் மக்களுக்கு விரோதமானது என்ற வகையில் பிரேரனையை ஆதரித்து வாக்களித்தனர்.
அத்துடன், பிரஜாசக்தி திட்டத்தினை எதிர்த்தும் தேசிய மக்கள் கட்சி தான் இருந்த அனைவரும் வாக்களித்ததன் பின்னர் பிரேரனை நிறைவேற்றப்பட்டது.
