டிட்வா தொடர்பான ஆய்வுகளுக்கு விசேட நாடாளுமன்றக் குழு நியமனம்
சூறாவளி டிட்வா தொடர்பான போதிய தயார்நிலை இன்மை குறித்து முழுமையான ஆய்வு நடத்தி, அதற்கான முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினர்கள் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கை
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போது, இக்குழுவின் தலைவராக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ செயற்படுவார் என அறிவித்துள்ளார்.

இக்குழுவில் பின்வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்: பிரசன்ன குணசேன அன்டன் ஜெயக்கொடி அருண ஜயசேகர அனுராத ஜயரத்ன ஹெக்டர் அப்புஹாமி ரோஹிணி குமாரி விஜேரத்ன எம்.கே.எம். அஸ்லம் அனுஷ்கா திலகரத்ன கந்தசாமி பிரபு ருவன் மாபாலகம பத்மநாதன் சத்தியலிங்கம் மேற்குறிப்பிட்ட உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழு, அனர்த்த முகாமைத்துவத்தில் ஏற்பட்ட குறைபாடுகளை ஆராய்ந்து எதிர்கால பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான அறிக்கையைச் சமர்ப்பிக்கவுள்ளது.
இலங்கை கடற்பரப்பில் 11 மணி நேரத்தின் பின்னர் குறிவைக்கப்பட்ட ஈரான் கப்பல்! வெடித்து சிதற வைத்த அமெரிக்கா
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan