இந்த வருடம் நெல் அறுவடை குறையும் ஆபத்து!விவசாயத் துறையின் அறிவிப்பு
'டிட்வா' சூறாவளியின் தாக்கம் மற்றும் சீரற்ற காலநிலையின் காரணமாக இந்த ஆண்டு நெல் அறுவடை 5-10 சதவீதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக விவசாயத் துறை தெரிவித்துள்ளது.
அறுவடை குறைவடைந்தாலும், அது நமது நாட்டின் உணவுப் பாதுகாப்பில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என விவசாயத் திணைக்களத்தின் இயக்குநர் ஜெனரல் துஷார விக்ரமாராச்சி தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் முதல் தடையாக வழங்கப்பட்ட இழப்பீடு
டிட்வா சூறாவளியால் சேதமடைந்த காய்கறிகள், பழங்கள் மற்றும் பிற துணை உணவுப் பயிர்களுக்கான இழப்பீட்டின் கீழ், 18,000 ஹெக்டேயருக்கும் அதிகமான விவசாய நிலங்களுக்கு அதாவது 82,000 விவசாயிகளுக்கு ரூ. 3,445 மில்லியன் தொகையை விவசாயத் திணைக்களம் செலுத்தியுள்ளது.
வரலாற்றில் முதல் முறையாக, விவசாயத் திணைக்களம் இழப்பீடு வழங்க முன்வந்துள்ளது. ஒரு பேரழிவை சந்தித்த போதும், நாடு தனக்குத் தேவையான அளவு அரிசியை உற்பத்தி செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

சில விவசாயிகளின் தவறான வங்கிக் கணக்குகள் மற்றும் செயல்படாத கணக்குகள் காரணமாக பயிர் சேதத்திற்கான இழப்பீடு வழங்குவதில் சில தாமதங்கள் ஏற்பட்டதாகவும் இயக்குநர் ஜெனரல் தெரிவித்தார்.
பிரச்சினைகள் உள்ள ஒரு சிறிய எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் சரி செய்யப்பட்டு, இழப்பீடு உடனடியாக வழங்கப்படும் என்றும் வலியுறுத்தினார்.