மன்னாரில் வெகு விரைவில் மாவட்டம் தழுவிய ரீதியில் போராட்டம் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மன்னாரில் காற்றாலை திட்டங்களை தொடர்வது ஜனாதிபதியின் தன்னிச்சையான முடிவாக இருந்தாலும் எமது மண்ணையும் வளங்களையும், உரிமையையும், பாதுகாக்க போராட்டங்களை தொடர்வது எமது உரிமை என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சில தினங்களில் மாவட்டம் தழுவிய ரீதியில் பாரிய போராட்டம் வெடிக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
மன்னார் போராட்டக்களத்தில் நேற்று (24) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்திலிருந்து வந்த செய்தி
அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டம் புதன்கிழமை (24) 53ஆவது நாளாகவும் தொடர்கின்றது. ஜனாதிபதி செயலகத்தில் இருந்து மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பது தொடர்பான செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
மன்னாரில் குறித்த 14 காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கும் பணிகளை நிறுத்த தேவையில்லை. அதற்கான பணிகளை தொடர்ந்து முன்னெடுக்குமாறும், அதனால் ஏற்படுகின்ற பாதிப்புக்கள் மற்றும் முன்னர் ஏற்பட்ட பாதிப்புக்களையும் நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற கட்டளையும் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
எதை வைத்து குறித்த அனுமதியை ஜனாதிபதி வழங்கியுள்ளார் என்று எமக்கு தெரியவில்லை. பலமுறை குறித்த திட்டம் குறித்து அதிகாரிகளுடனும், அமைச்சர்களுடனும், ஜனாதிபதியுடனும் தொடர்பு கொண்டு மக்களுடைய கருத்துக்களையும், எங்களுடைய கருத்துக்களையும் முன்வைத்தோம்.
உரிமைக்கான போராட்டம்
எனினும் மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்காமல், தான்தோன்றித்தனமாக தனது சுய முடிவை எடுத்துள்ளமை நம்பியிருந்த எமக்கு மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது. வாழ்வது எமது உரிமை. அதை யாரும் பறிக்க முடியாது. அந்த உரிமைக்காக நாங்கள் தொடர்ந்தும் போராடுவோம். எமது போராட்டம் விரிவடைகிறது என்பதை உங்களுக்கு கூறிக் கொள்ள விரும்புகின்றோம்.
எமது மூன்று கோரிக்கைகள் நிறைவேறும் வரை எமது போராட்டம் தொடரும். மாவட்ட ரீதியில் மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து பாரிய போராட்டமாக மாறவுள்ளது. சட்டத்தை மீறுகின்ற போராட்டமாக ஏனையவர்களுக்கு இடையூறை ஏற்படுத்துகின்ற போராட்டமாக இப்போராட்டம் ஒருபோதும் அமையாது என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





வட்டியில்லா கடன்களை வழங்கும் PM Svanidhi Yojana திட்டம்.., வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி News Lankasri

உங்கள் குடும்பத்தை பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா? உங்களுக்கு சில முக்கிய தகவல்கள் News Lankasri
