அனர்த்தத்தினால் காாணமல் போனவர்கள் குறித்து வெளியான வர்த்தமானி அறிவித்தல்
‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட 22 நிர்வாக மாவட்டங்களில் காணாமல் போயுள்ள நபர்களுக்கு மரணச் சான்றிதழ்கள் வழங்கும் வகையில் புதிய வர்த்தமானி ஒன்றை பதிவாளர் நாயகம் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
கண்டி, நுவரெலியா, பதுளை, குருனாகல், மாத்தளை, கேகாலை, கம்பஹா, முல்லைத்தீவு, அனுராதபுர, கொழும்பு, யாழ்ப்பாணம், பொலன்னறுவை, மன்னார், புத்தளம், இரத்தினபுரி, மொணராகலை, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, கிளிநொச்சி, வவுனியா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு இது பொருந்தும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டின் மரண பதிவுச் சட்டத்தின் (தற்காலிக ஏற்பாடுகள்) பிரிவு 11 இன் 9ஆம் ஏற்பாடு படி, 2025 நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட ‘டிட்வா’ சூறாவளியால் உண்டான நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ‘தேசிய பேரழிவு பாதிப்பு பிராந்தியங்கள்’ என்று அறிவித்தே இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பில் மரண சான்றிதழ்களை வழங்கும் நோக்கில் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.