வடக்கு மாகாண ஆளுநரால் மாணவர்களுக்கான பார்வை ஆய்வு அட்டைகள் வழங்கி வைப்பு
வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கான பார்வை ஆய்வு அட்டைகள் (Vision charts) ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது.
பாடசாலை மாணவர்களின் பார்வைத் திறனை மேம்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள செயல்திட்டத்தின் ஒரு கட்டமாக பார்வை ஆய்வு அட்டைகளை (Vision charts) உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நேற்று (17.04.2024) யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
ஆசிரியர்கள் பயிற்றுவிப்பு
மாணவர்களது கண் சுகாதாரம் தொடர்பில் ஆராய்வதற்கான வேலைத்திட்டத்தின் முதற்கட்ட பணிகள் ஏப்ரல் மாதம் 03ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளது.
இதற்கமைய, கண் சுகாதாரம் தொடர்பில் ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் செயற்பாடுகள் வலயக் கல்வி பணிமனைகளூடாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் ஊடாக பாடசாலைகளில் மாணவர்களின் பார்வைத் திறன் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை பெற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னர் உரிய மாணவர்கள் பார்வை தொடர்பான சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
இந்நிலையில், ஆளுநரின் செயலகத்தின் ஊடாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைகளுக்கு வழங்கப்பட்டு அங்கிருந்து பாடசாலைகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.