மூன்று மாதங்களின் பின்னர் லாஃப்ஸ் சமையல் எரிவாயு கிளிநொச்சி மாவட்டத்தில் விநியோகம்
கடந்த மூன்று மாதங்களின் பின்னர் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
கடந்த மூன்று மாதங்களாக சமையல் எரிவாயு பெற முடியாது சிக்கல்களை மக்கள் எதிர்நோக்கிய நிலையில், அரசாங்கத்தின் துரித நடவடிக்கையின் மூலம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு நாட்டின் பல பகுதிகளிலும் விநியோகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
லாஃப்ஸ் விலை மாற்றம்
நவம்பர் 13 நள்ளிரவு முதல் 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டர் விலை 1775 ரூபாவாக உயர்த்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அமைச்சர் வசந்த சமரசிங்கவுடன் நடைபெற்ற சந்திப்பை அடுத்து விலையை குறைப்பதற்கான அறிவித்தலை லாஃப்ஸ் நிறுவனம் வௌியிட்டுள்ளது.
அதன்படி கடந்த 17ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், லாஃப்ஸ் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளது.
விலை திருத்தத்திற்கு அமைய 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 745 ரூபாவாலும் (புதிய விலை 5,995 ரூபா), 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 322 ரூபாவாலும் (புதிய விலை 2,398 ரூபா) குறைக்கப்பட்டுள்ளது.