தேர்தல் தொடர்பிலான துண்டுப்பிரசுரங்கள் மட்டக்களப்பில் விநியோகம்
மட்டக்களப்பு நகரில் ஜனநாயகம் மற்றும் அதன் சார்ந்த சவால்களும், அடிப்படை மனித உரிமைகள், வாக்குரிமை மற்றும் தேர்தலை ஒத்திவைத்தல், போன்ற விடையங்களை உள்ளடக்கிய துண்டுப்பிரசுரங்கள் மக்கள் மத்தியில் இளைஞர்களால் விநியோக்கிக்கப்பட்டுள்ளன.
தேர்தல்கள் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தின் இணைப்பாளர் தலைமையில் நடைபெற்றுள்ளது.
பலர் பங்கேற்பு
இந்நிகழ்வில் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள், சிவில் சமூக செயற்பட்டார்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள பேருந்து தரிப்பிடம் மற்றும் அதனை அண்டியுள்ள சூழல், வர்த்தக நிலையங்கள், போக்குவரத்தில் ஈடுபட்ட மக்களுக்கும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |