பொது போக்குவரத்திற்கான மேலதிக எரிபொருள் விநியோகம் குறித்து கலந்துரையாடல்
எரிபொருள் விநியோகம் தொடர்பில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
அதன்படி எரிசக்தி அமைச்சு பொது போக்குவரத்து மற்றும் முச்சக்கரவண்டி சேவை தொழில்களில் ஈடுபடும் வாகனங்களுக்கான மேலதிக எரிபொருள் விநியோகம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகள் மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் தேவைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
| தேசிய எரிபொருள் அனுமதி அட்டை! மீண்டும் ஆரம்பமாகும் நடைமுறை |
பரிந்துரை தொடர்பில் தீர்மானம்
மாகாணசபைகளின் உதவியுடன் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் ஒவ்வொரு பிரிவிற்குமான தேவைகளை இனங்கண்டு, எரிபொருள் தேவைகளை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு பரிந்துரைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேவைகள் கிடைத்தவுடன், அடுத்த வாரத்திற்குள் அந்தத் தேவைகளுக்கான கூடுதல் ஒதுக்கீட்டை தனி கியூ.ஆர் குறியீட்டில் ஒதுக்குவதற்கான வாய்ப்பை அமைச்சகம் பரிசீலிக்கும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
நிலையான ஒதுக்கீடு
அதுவரை, கடந்த வாரம் 107 இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களில் இருந்து தனியார் பேருந்துகளின் தேவைகளை இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்கள் தொடர்ந்து பூர்த்தி செய்யும் என்றும், இந்த வாரம் முச்சக்கரவண்டிகளுக்கான நிலையான ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இக்கலந்துரையாடலில் 15 முச்சக்கரவண்டி சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan