மன்னாரில் நீண்ட நாட்களின் பின்னர் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விநியோகம் (Photos)
மன்னார் நகரில் உள்ள எரிபொருள் விற்பனை நிலையங்களில் நீண்ட நாட்களின் பின்னர் வாகனங்களுக்கான டீசல் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
நீண்ட நாட்களாக மன்னாரில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படாமையினால் வாகன உரிமையாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.
மேலும் தனியார் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வரும் பேருந்துகளுக்கும் டீசல் இல்லாமையினால் பேருந்து உரிமையாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.
மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருள் விநியோகம்
இந்நிலையில் மன்னார் நகர்ப் பகுதியில் உள்ள இரண்டு எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலும் இன்றையதினம் முதல் வாகனங்களுக்கான டீசல் எரிபொருள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
மேலும் மன்னார் - பள்ளிமுனை பிரதான வீதியில் உள்ள எரிபொருள் விற்பனை நிலையத்தில் இன்று காலை முதல் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது.
குடும்ப அட்டை பரிசீலிக்கப்பட்டு 500 ரூபாவிற்கு மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது. மேலும் பெட்ரோல் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



