ரணில் விடுத்த அழைப்பு: தேர்தல் கண்காணிப்பு அரச சார்பற்ற நிறுவனங்கள் அதிருப்தி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு, அழைப்பு விடுக்கப்பட்டமை தொடர்பில் இலங்கையில் உள்ள தேர்தல் கண்காணிப்பு அரச சார்பற்ற நிறுவனங்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன.
இலங்கையில் தேர்தல்களை கண்காணிக்கும் முக்கிய அரச சார்பற்ற நிறுவனமான பெஃப்ரல்,கடந்த வியாழன் அன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்களின் சந்திப்பு நடத்தியமை குறித்து அதிருப்தியை வெளியிட்டதுடன், அது நெறிமுறையற்றது மற்றும் தேவையற்றது என்றும் கூறியுள்ளது.
தேர்தல் பணிகள்
தேர்தல்களை நடத்துவதில் தேர்தல் ஆணைக்குழு ஈடுபட்டுள்ள நிலையில், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களைச் சந்திப்பதை எவரும் எதிர்பார்க்கவில்லை என பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
தேர்தல் பணிகளில் மும்முரமாக இருக்கும்போது, தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களை ஏன் நிர்வாகிகள் சந்திக்க வேண்டும் என்பது தமக்கு புரியவில்லை.
தேர்தல் ஆணைக்குழு, ஒரு சுதந்திரமான அமைப்பாக இருப்பதால் அதன் உத்தியோகபூர்வ கடமைகளில் ஆலோசனை கூறவோ அல்லது அறிவுறுத்தவோ நிர்வாக அதிகாரிக்கு அதிகாரம் இல்லை.
இந்த சந்திப்பு தேர்தல் ஆணையக்குழுவின்; சுதந்திரத்தையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று பெஃப்ரல், அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
தெளிவான முயற்சி
இதேவேளை தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும் ஏனைய 6 அமைப்புக்களும் ஜனாதிபதியின் இந்த சந்திப்பை கண்டித்துள்ளன.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களை ஜனாதிபதி வரவழைத்தமையானது, தேர்தல்கள் ஆணைக்குழுவின் மீது அவர் செல்வாக்கு செலுத்துவதற்கான தெளிவான முயற்சியாகும் என்று அந்த அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன. நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்துவதற்கான வேட்புமனு தாக்கல் திகதி மற்றும் காலக்கெடுவை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இலங்கையில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கு முழு நாடு மட்டுமல்ல, சர்வதேச சமூகமும் கூட ஆர்வமாக உள்ளது.
அத்தகைய சூழ்நிலையில், ஜனாதிபதியால் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள்;
அழைக்கப்படுவது மிகவும் தவறானது, ஒழுக்கக்கேடானது மற்றும் மோசமான
முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறது என்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள்
தெரிவித்துள்ளன.



